பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகிறான்;போகிறான்..! கூறிய முட்கள் கைகளைக் கீறிடினும் மலர் கொய் யத் தாவும் குமரியின் கரங்கள். மூச்சை நிறுத்திவிடும் பயங்கர அலைகள் இருப் பினும் முத்தெடுக்க நினைக்கும் மனித உள்ளம். பாறைகள் இடிந்து உடலை நசுக்கிவிடும், என்ப தறிந்தும் பொன்னெடுக்க சுரங்கந் தோண்டும் மானிட ஜாதி. மலரும் - முத்தும் - பொன்னும் இலட்சியங்களா கின்றன. முள்ளும்-கடலும் - பாறையு இடையூறுகளா கின்றன. இடையூறுகளுக்கு அஞ்சாத பண்புகொண்ட வன் இலட்சியப் பாதையை நோக்கி நடந்தபடியிருக் கிறான். அந்த இலட்சிய வீரன் எதற்கும் கலங்காத காளை. "இடுக்கண் வருங்கால் நகுக," இந்தக் குறள் அவன் மூச்சு. இலட்சியமே என் உயிர்' இது அவன் பேச்சு. கொடுமைகள் கோர நர்த்தனம் செய்யும்போதும் அவன் குதூகலமாகத்தான் தன் பயணத்தை நடத்து வான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/16&oldid=1701812" இலிருந்து மீள்விக்கப்பட்டது