பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தன் எதிரே தனக்குக் தடையாக நிற்கும் மனிதர் களை அவன் மாமிச மலையென்பான். நசுங்கிப் போன ஈயச் செம்பே! என நையாண்டி செய்வான். "என்னை இப்படிப் பேசச் சொல்வது இதயத்தில் பீறிடும் இறுமாப்பல்ல ! உன் கண்களிலே தாண்டவ மாடுகிறதே...அந்த கோரம் ! உன் உதடுகளின் இடுக் கில் வழிகிறதே அந்த அலட்சியம்! உன் உள்ளத்தில் பொங்குகிறதே அந்த நஞ்சுக் குழம்பு! இவைதான் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன" என்று தன் ஆத்திரத்தித்திற்கு விளக்கம் கூறுவான். அவன் புகழுக்காக ஆசைப் பட்டு பொதுநலப் பணியில் குதிக்கவில்லை. அவனுக்குத் தெரியும் அந்த வேலை சருக்கு மரம் ஏறும் கதை யென்று ! அவனறி வான் பொதுப்பணி-குமுறிவரும் வெள்ளப் பெருக் கில் எதிர் நீச்சல் போடும் செயல் என்று ! எதிர் இயக் கத்தார் ஏவுகிற கணைகள் சொந்த இயக்கத்தார் சொரு குகிற ஈட்டிகள் - இவைகளை எதிர்பார்த்தே அந்த இலட்சியக்காரன் களத்தில் உலவுகிறான். பாசிபிடித்த ரத்தக்குட்டைகளாக - உளுத்துப் போன எலும்புக் கூண்டுகளாக-செல் மொய்த்த நரம் புக் கூடுகளாக மக்கள் வாழ்வது அவனுக்குப் பொறுக்க முடியவில்லை. வாழ்வதற்குப் பகையாக இருக்கும் அத்தனை சக்தி களையும் அவன் நேர் நின்று தாக்குகிறான். மகாத்மாக் கள் போற்றி வந்த மதமா ? மரவுரிதரித்த நாள் முதல் வணங்கி வந்த கடவுளா? மதத்தின் தலைவர்களா? கட வுளின் பிரதிநிதிகளா? அத்தனையும் அவன் சிந்தனைப் பட்டரையில் தூள் ! தூள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/17&oldid=1701813" இலிருந்து மீள்விக்கப்பட்டது