பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் நம் பாட்டன் கொசுவின் தாயகம். உயிர்க்குடிக்கும் பல்வகைப் புழுக்களின் பிறப்பிடம். கண்ணால் காணமுடியாத தொலைவிலேயே மூக்கைப் பிடித்துக்கொள்ளக் கூடிய நாற்றம். கழிவுப்பொருள்களின் முடிவிடம்-ஆபாசத் தின் எல்லை. இம்மாதிரி ஒரு குட்டையைக் காணு கிறான் மனிதன். ஆகா! இதோ நெளியும் புழுக்களின் நேர்மைதான் என்னே...பரத நாட்டியமாடும் பாவை யரைப் போலல்லவா வளைந்து வளைந்து ஓடுகின்றன. பகவானின் படைப்பே ; படைப்பு ! இந்த மணத்தை எங்கும் நுகர்ந்திட முடியாதே என்று கூறி அந்த சேற்றிலே விழுந்து புரளுகிறான். அடுத்த மனிதன் குட்டையின் நாற்றத்தைப் போக்கினால் பலன் உண்டு எனக் கூறுகிறான். வாசனைப் பொருள்களை அச்சிறு குளத்தில் ஊற்றினால் பயன் கிடைக்கு மென்பது அவன் முடிவு. மூன்றாவது மனிதன் குட்டையின் தண்ணீரை யெல்லாம் இறைத்துவிட்டுக் குட்டையைக் குளமாக்கி புதுத் தண்ணீரைப் பாய்ச்சி தக்கதோர் மருந்து கலந். தால் மக்களுக்குப் பயன் தரும் என்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/19&oldid=1701815" இலிருந்து மீள்விக்கப்பட்டது