பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இந்த மூன்றுவகைத் தோழர்களில் உங்கள் 'ஓட்' யாருக்கு என்பது 'என் கேள்வியல்ல ! மேலே குறிப் பிட்ட நாற்றக் குட்டையாக நமது தமிழ்நாட்டுக் கலை அமைந்துள்ளதே அதைத் திருத்த வேண்டாமா என் பதுதான் பிரச்சினை. இந்தப் பிரச்சினையை மீண்டும். கிளப்பவேண்டிய அவசியத்தை ஒரு தோழர் ஏற் படுத்தியுள்ளார். பிழைப்புக்கும் செல்வாக்குக்கும் பாதை அமைத்துக் கொள்வதற்காக ஒரு சிலர் கலைக் குட்டையிலே விழுந்து புரளுவது எனக்குத் தெரியும். சேறு அவர்களுக்கு சந்தனமாகவும், சேற்றிலே கிளம் பும் நாற்றம் அவர்களுக்கு மல்லிகையில் மோதி வரும் தென்றலாகவும் தோன்றுகிறதாம். அவர்களைத் திருத் தவோ அல்லது திருப்பவோ நினைப்பது நாயின் வாலை நிமிர்க்க நினைப்பது போலத்தான் என்பதும் எனக்குப் புரியும். புரிந்த போதிலும் இவர்களுடைய வீச்சில் திராவிட இளைஞர்கள் சிக்கிவிடலாகாது என் பதற்காகவே; "பாம்பே! கடிக்காமலிரு, தேளே ! கொட்டாமலிரு!' என். அகிம்சா உபதேசம் செய்வதைவிட அவை 'விஷ ஜந்துக்கள் விலகிப் போங்கள்' என்று எச்சரிக்கை செய்வதை நோக்க மாகக் கொண்டுள்ளேன். வலை வாழை, மா, பலா, என்ற முக்கனியின் கூட்டில் வசிய மருந்து கலப்பதுண்டு. வண்ணப் புதுச்சேலை- வாலிப மேற்பூச்சு இவைகளோடு, வயதேறிய மாது வலை வீசுவதுண்டு. இந்த வகையைச் சேர்ந்த கட்டுரையொன்றை நான் காண நேர்ந்தது, ஆர். எம். அழகப்ப செட்டி யாரை ஆசிரியராகக் கொண்ட " குமுதம்' என்ற 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/20&oldid=1701816" இலிருந்து மீள்விக்கப்பட்டது