பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையிலும் இன 20 மாத வெளியீட்டில் ஒரு கலாரசிகர். தீட்டியுள்ளது. கட்டுரையின் தலைப்பு இராவணன் நம் பாட்டன் தலைப்பைக்கண்டதும்...... அழகப்பாவின் பத்திரி உணர்ச்சி வாடை வீசுகிறதே என துள்ளிக் குதித்தேன். நான் நினைத்தது முழுத்தவறு என்பதை மெய்ப்பிப்பது போல் தலைப்பின் ஓரத்தில் பத்து தலை இராவணன் படம் விளங்கிற்று. இருந்தா லும் தலைப்பிலே கலந்திருந்த அந்த இன உணர்ச்சி என்னைப் படிக்கத் தூண்டிற்று. இராவணன் நம் பாட்டன்! ஆகா ! தென்னிலங்கை வேந்தன்-தீராதி தீரன் - திராவிடரின் மூதாதை-அவனை நம் பாட்டன் என்று உரிமை கொண்டாடும் உண்மைத் தோழனுக்கு. 'குமுத'த்திலே இடமா? எனக் கூத்தாடிற்று என்: உள்ளம். படிக்க ஆரம்பித்தேன்; "தோள் கண்டார் தோளே கண்டார்" என்ற கம்பனின் வர்ணனையைத் துவங்கி யிருந்தார் தோழர்! இராவணன் நம் பாட்டன் என்று கூறிவிட்டு...இராமனின் அழகை வர்ணிக்கும் கட்டத்தில் நிற்கிறாரே ஏன் என்று எனக்கு முதலில் புரியவில்லை. கம்பரின் வர்ணனையைப் புகழ்ந்து... அட்ட ! கடவுளீயக் கலையை சிருஷ்டித்திருக்கிறாரே கம்பநாட்டாழ்வார் எனக் காவடிச்சிந்து பாடுவதோடு கட்டுரையாளர் நிறுத்திவிடுவார்; கம்பர்தருங் காட்சி,. கம்பசித்திரம், சித்திர ராமாயணம் இந்த வர்க்கத்தைச் சேர்ந்த இழைப்பு வேலையாக இருக்கும் இதுவென எண்ணினேன். ஆனால் கட்டுரையாளர், வாலிபனை மயக்க வண்ணப்புதுச் சேலை யுடுத்திவந்த வயோதிக மாது என்பதை நன்றாக நிரூபித்துக்கொண்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/21&oldid=1701817" இலிருந்து மீள்விக்கப்பட்டது