பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 21 உண்மை கலை என்னும் கடவுள்பொருளின் இயல்பை உணாந்துவிட்டால் இந்தப் பிணக்குக்கு கலையுலகில் இடமில்லை. அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்ததோர் அழகுக்கோலம் தாங்குவது கலை. ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது, இதை உணர்ந் தால் எரிக்கும் வெறியும் தரிக்கும் வெறியும் கலை யுலகில் இடம்பெறமாட்டா”. ஆசிரியர் புகுத்தியுள்ள கருத்து இது !... இதைத் தான் கனிச்சாற்றில் கலந்த 'வசிய மருந்து' என நான் கூறுகிறேன். சோற்று உருண்டையைக் காட்டி மீனைத் தூண்டிலில் சிக்க வைக்கும் சூழ்ச்சியைப் போல் இரா வணன் நம் பாட்டன் என்ற தலைப்பைக் காட்டி கம்பர் கலையெனும் தூண்டில் முள்ளில் இளைஞர்களை சிக்க வைக்க முயற்சிக்கிறார் தோழர். சேதுப்பிள்ளையும் பசுமலை பாரதியும், பண்டித நிற்க முடியாத இடத்திலே நிற்க நினைக்கிறார் தோழர். சரிந்து விழுந்த கம்பராமாயணக் கட்டிடத்தைப் புதுப் பிக்க சாரம் கட்டுகிறார் அன்பர். பாவம் பரிதாபத்திற் குரியவர்."கலை வாழ்க! ஆனால் கலை, நாற்றக் குட்டை யாக-புழுக்கள் நெரியும் இடமாக உள்ள நிலை ஒழிக!" இதுதான் பகுத்தறிவாளனின் பாசறை முழக்கம். இந்த முழக்கம் முன்னமேயே கம்பர், சேக்கிழார் போன்ற இனத் துரோகிகளின் முதுகெலும்பை முறித்து விட்டது என்பதை நண்பர் அறிந்திருந்தும் நச்சுப்பல்லை நீட்டியிருக்கிறார். ஆபாசக் குட்டையின் அழுகல் நாற்றத்தை அந்திமல்லிகையின் வாடை யெனக் கூறும் ரகம் இவர் ! முகத்தின் சுருக்கங்களை முக்காட்டால் மறைத்துக்கொண்டு என் முல்லைச் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/22&oldid=1701818" இலிருந்து மீள்விக்கப்பட்டது