பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மயக்கிக் கவிழ்ப்பதைக் கலையாகக் கொள்வதையும், அதற்கென அவர்கள் கம்ப ராமாயணத்தில் தொழி லுக்கேற்ற சுவையான கட்டங்களைத் தேடுவதையும்— அதற்காகவே அவர்கள் கம்பர் கலையை ஏத்திப் புகழ் வதையும் ஒத்துக் கொள்கிறாரா என்பது என் கேள்வி ! 6 6 'ஒருவர் காட்சி மற்றவர்க்கு ஏலாது" என்கிறார். உண்மை. எரிக்கும் எண்ணம் சுயமரியாதைக்காரர் களுக்கு ஏற்பட இது காரணமாகுமா என்று கேட் கிறேன். இனக்கொலை செய்தார் கம்பர். சாதாரண மனி தனை சகத் ரக்ஷகனாக்கிக் காட்டினார் கம்பர். கடவுளின் காதையைப் பாட வந்த இடத்திலும் காமலீலைகளுக்கு முதல் ஸ்தானம் அளித்தார் கம்பர். இந்தக் குற்றச் சாட்டுகள் தான் கம்பர் கலையைக் கொளுத்தியெறியும் தீக்குச்சுகள் என்பதை குமுதத் தின் வியாசகர்த்தா தெரிந்துகொள்ள வேண்டும். கம்பரின் உயிரைக் காப்பாற்ற கட்டுரையாளர், கவிஞர் பாரதிதாசனின் "சஞ்சீவி பர்வதத்தின் சாரலில்" ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்திருக்கிறார். இராம பக்தரல்லவா ? கம்பரின் வர்ணனைகள் நம்பத் தகாதவை என்கிறீர்களே; பாரதிதாசன் பாடியுள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற கவிதையில் ஒரு பச்சிலையின் உதவியால் இங்கிலாந்து, அமெரிக்கா தேசங்களில் பேசுவோரை குப்பனும் வஞ்சியும் பார்க்க முடிந்தது என்கிறாரே இந்த வர்ணனையை நம்பலாமா? என்கின்ற தோரணையில் தோழர் பிரச்சினையை எழுப்பு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/24&oldid=1701821" இலிருந்து மீள்விக்கப்பட்டது