பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 "கலைஞர், களியர், பித்தர், பக்தர்-இவர்கள் பெரும்பாலும் ஒரு நிலையினர். அவர்களை உணர அவர்களாகவே மாறத்தான் வேண்டும். முடியவில்லை என்றால் ஒதுங்கிவிட வேண்டியதுதான்." என்று முடிவு கூறுகிறார் கட்டுரையாளர். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பவன்...... விவாதத்தை வளர்த்த முடியாமல், நீ பேசுவது விதண்டாவாதங்கள் என்று கூறிவிட்டு ஓடுவதுபோலிருக்கிறது தோழரின் போக்கு! மூக்கையறுத்துக் கொள்ளுங்கள்... கடவுளை தரிசிக்கலாம் எனக் கூறிய மூக்கறையனின் தந்திரத் தைப் போலிருக்கிறது தோழரின் அபிப்பிராயம். சொட்டையுள்ள இடத்தை சுட்டிக் காட்டுகிறான் சுயமரியாதைக்காரன். "பொட்டைக் கண் உனக்கு " என்று பொய் கூறுகிறார் நண்பர் ! 66 ' கம்ப ராமாயணத்தில் கடவுளீயம் இல்லை. கதை உண்மையில்லை. இராமன் சாதாரண மனிதன். தமிழ் அழகுக்காக...கலை நுட்பத்திற்காக மட்டும் படியுங்கள். இராமனைக் கடவுளென எண்ணி சீதா கல்யாண மும், அனுமாருக்கு வடைமாலை சாற்றும் வைபவமும் நடத்தாதீர்கள்" என்று ஒரு முன்னுரை எழுதிவிட்டு கம்ப ராமாயணத்தை அச்சிடுவதற்குத் துணியாத தோழர் பெருந்தகை... செல்வர் வீட்டுக் குமுதத் திலே சீர்திருத்த வாதியின் மேல் சீற்றம் நடத்துவது ஏனோ தெரியவில்லை. மக்கள் பண்பு உயர, கலை தேவையே தவிர மாட. மாளிகையிலே-மலர்ச் சோலையிலே-மஞ்சத்திலே- மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கிடக்க, மங்கையர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/27&oldid=1701830" இலிருந்து மீள்விக்கப்பட்டது