பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கல்ல! இரஷ்யாவில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் காவற்பெண்டு பாரிமகளிர் பெருங்கோப் பெண்டு வெண்ணிக்குயத்தியார் வெறிபாடிய காமக் கண்ணியார் புதுப் பெயர்களல்ல ! புறநானூற்றிலே பொதிந்து கிடக்கும் புதையல்கள் பலவற்றின் படைப்பாளர்கள். பெண்கள் ! அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பேதுக்கடி என லாலிபாடும் பாட்டிகள்......பத்தாம்பசலிகள் நிறைந்துள்ள இன்றைய திராவிடத்தின் வரலாற்றில் ஒன்று இரண்டு பக்கங்களிலே காணப்படும் மங்கையர் கும்பல்! கவிதை மழை பொழிந்த தமிழரசிகள் ! தமிழுக்கே தனிப்பெருமை தந்த தங்கக் கொடிகள்! வீரத்தின் பீடத்திலே அமர்த்தி வெற்றி மாலை சூட்டி, வெங்கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோளெங் கள் வெற்றித்தோள்கள் என காளையரைத் தட்டிக் கொடுத்து, கங்கையைப்போல் காவேரியைப்போல் கருத்துரை கவிதைகளை, உணர்ச்சி கொப்பளிக்க, பெருக்கெடுக்கச் செய்த பெருமாட்டிகள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/30&oldid=1701833" இலிருந்து மீள்விக்கப்பட்டது