பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 30 ந் தேதி மோகனப் புன்னகையார் மோகன் தாஸ் காந்தி ! 31-ந் தேதி. அய்யய்யோ...முறிந் தும் எரிந்தும் போன எலும்புத்துண்டுகள்! ஒரு முட்டாள் வீசிய மூன்று குண்டுகள் முரட்டுத் தனத் தையும் மௌடீக மதவெறியையும் போக்குவதற்கு முயன்ற ஒரு தியாகியின் வாழ்வை முடித்தன. "ஏ! துப்பாக்கிக் குண்டே !...அந்த துன்மார்க் கன் செய்த துரோக வேலைக்கு நீயும் துணையா ?... எப் படித்தான்...அண்ணல் காந்தியின் அன்பு கனியும் இரு தயத்தைப் பிளந்தெறிந்தாயோ ?"...என்று இந்தக் கண்டம் அழுகிறது. ஏன்... உலகமே அழுகிறது. காந்தியாரின் உயிரை உறிஞ்சியவன் ஒரு பார்ப் பனன், ஆம்... சாம்ராஜ்யங்களை சாய்த்த பரம்பரை ! மன்னாதி மன்னர்களை மண்கவிழச் செய்த மரபு 1... அந்த இனம் கக்கிய ஒரு துளி விஷம் காந்தியார் உயி ரை சூறையாடிற்று. அந்த வைதீகம் வீசிய ஒரு வஞ் சகவாள் வார்தா உத்தமரின் வாழ்வை வெட்டித் தள்ளிற்று. அந்த மதவெறி செய்த சதி...... ஒரு மாபெரும் வீரருக்கு மரணத்தீர்ப்பு வழங்கிற்று. ... இந்தியா கண்ணீர் விடுகிறது. இந்து மகா சபை இனிப்பு வழங்கிற்றாம். ஆச்சரியப்பட வில்லை நாம் / ஓமான் கடலில் சர். செல்வத்தின் வாழ்வு சிதைந்த போது சர்க்கரை வழங்கிய ஆரியக் கூட்டம் வாழ்கிற திராவிடத்தில் நாமும் வாழ்வதால் ! காந்தி யாரின் கொள்கைகளில் நமக்கு கருத்து வேற்றுமை யுண்டு. ஆனால் நாம் கல் நெஞ்சர்களல்ல!...காந்தி யாரின் தியாகத்தையும்......அவர் மேலான உழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/40&oldid=1701844" இலிருந்து மீள்விக்கப்பட்டது