பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 鈉 பையும்...அவர் ஊக்கத்தையும்..நாம் பாராட்டியவர் கள்!...அதே நேரத்தில் காந்தியாரின் தொண்டு பல பதவி வேட்டைக் காரர்களுக்கும் பனியா.... பார்ப் பனர்களுக்கும் பயன் படுகிறது என்றும் சொல்லத் தவறாதவர்கள் !... காந்தியாரே! தங்கள் உழைப்பின் பெரும் பகுதியைக் கூலியாகக் கொடுத்து... இக் கண்டத்திற்கு ஓரளவு விடுதலை வாங்கித்தந்தீரே !. விடுதலை உண் மை விடுதலையாக மாறுவதற்கு முன்...பதவி வேட் டை ஒய்வதற்கு முன் தேசீயத்தில் தெகிடுதத்தம் கலந்து விட்டது என்று தாங்கள் எழுதி...அந்த அறி வுரை ஆட்சியாளரை நல்வழிப் படுத்துவதற்கு முன், நாசத்திற்காளானீரே !... 'சுதந்தரம்' கிடைத்த ஆறாவது மாதத்தில்- இந்த அகால சாக்காடா ?-அதுவும் தங்களுக்கா ?-தாங்கள் என்ன மதவெறியை வளர்த்தீர்களா ?- அமைதியைக் குலைத்தீர்களா? அராஜகத்திற்கு காரணகர்த்தாவா யிருந்தீர்களா?-இல்லையே!-பிறகேன் இந்தப் படு கொலை! மதவெறி- பதவிவெறி பார்ப்பனீய வெறி... இது தான் பதிலா?-சுதந்திர இந்தியாவில்- யாருக்கா கப்பாடு பட்டீர்களோ அந்த சமுதாயத்தின் ஒரு மலைப் பாம்பால் விழுங்கப்பட்டீர்கள் என்பது- அவமானம் வெட்கக் கேடு...இந்த உபகண்டத்திற்கேற்பட்ட...... மாறாத இழிச்சொல் !...... C. 30-1-1948... ஆமாம்... வரலாற்றை வீணாக்கிய நாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/41&oldid=1701848" இலிருந்து மீள்விக்கப்பட்டது