பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தினியே உன்போல்...! ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார் களே அது எப்படிப் பொருந்தும் ?" 66 ஐவர் என்றால் ஐந்து பஞ்ச பூதங்கள், காந்திஜி கூட அரிஜன் பத்திரிகையில் அப்படித்தான் வியாக் யானம் செய்திருக்கிறார். எல்லாம் தத்துவார்த்தம் " "பஞ்ச பூதங்களா ?......சரி...அவள் கர்ணன் மேலுங் காதல கொண்டாளாமே அந்த ஆறாவது பூதம் எதுவோ?" 66 66 .... 99 ......" பதில் இல்லை. பருவமடையாத குந்தி தேவி கர்ணன் என்ற பாலகனை கன்னத்தால் பெற்றாள்! அது எப்படி முடியும்?" "பகவத் அனுக்ரகம், வரப்பிரசாதம்” 66 பால்யத்திலே சூரிய பகவானைக் கூடி பிள்ளை பெற்றவள் பிறகு பாண்டு மகாராஜாவை மணந்தது பத்தினி தன்மைக்கு ஏற்றதா ?" "அட பாவி... சூரியனை அவள் கூடினாளா ? டே நாக்கு அழுகிவிடுமடா ! அநியாயம் பேசாதே! குந்தி தேவி குளிகை சாப்பிட்டாள். சூரியன் வந்தார். வரம் தந்தார். உடனே கர்ணன் தோன்றினான். பார்த்தது மாதிரி பொய் பேசாதேடா பாவிப்பயலே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/42&oldid=1701849" இலிருந்து மீள்விக்கப்பட்டது