பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 42 ஓகோ அப்படியா 1...சரி! பாண்டுவை மணந்த குந்தி தேவி யமதர்மனுக்கு தர்மரையும், வாயுபக வானுக்கு பீமரையும், இந்திரனுக்கு அர்ச்சுனரையும் பெற்றாளாமே...அது?" "அதிலும் தோஷமில்லை, யமன், வாயு, இந்திரன் மூவரையும் குந்தி தேவி கையால் தொடவில்லை. குளி கையை சாப்பிட்டாள். அவர்கள் பிரத்யக்ஷமானார்கள் அவள் கும்பிட்டாள். குழந்தைகள் தோன்றினார்கள். இதெல்லாம் தத்துவார்த்த மடா தருதலை!"

வயதில் பெரியவரை எதிர்த்துப் பேசுவானேன் என்று கேள்வி கேட்ட வாலிபன் திரும்பி விடுகிறான். அல்லது சாக்கடையில் சவ்வாது மணமா கிளம்பும் என்ற திருப்தியோடு பேச்சை முடித்து விடுகிறான். ஆனால் ஒன்று...தத்துவார்த்த முக்காடு போட்டு தகராறுப் புராணங்களைக் காப்பாற்றப் புறப்படும் பிரசங்க பூஷணங்கள் ஸ்ரீ ஜத் கோவிந்தராஜ அய்யங் காரால் எழுதப்பட்டு 1937-ல் வெளியிடப்பட்ட வில்லிபாரத வசனம் 43-ம் பக்கத்தைச் சற்றுப் புரட் டிப் பார்க்கட்டும். .. குழந்தை வேண்டி குந்தி குளிகை சாப்பிடு கிறாள். இந்திரன் தோன்றுகிறான். தோன்றியவன் குந்தியைத் தொடாமல். அவள் துவளாமல் "வரந் தந்தேன்” என்று சொல்லி மறைந்து விட வில்லை. படி யுங்கள், அய்யங்காரே கூறுகிறார் அழ்காக ! சுவை கூட்டி! 66 பீதாம்பரமும் பொன்னாபரணமும் தலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/43&oldid=1701850" இலிருந்து மீள்விக்கப்பட்டது