பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முடியும், வில்லும் தோளும், வேலும் கையும், வீரகண் டையும் விளங்கத் தோன்றிய எழில் தன்னைக் கண்டு மனங்களி கூர்ந்து மங்கை குந்தியும் காமக்கனி யெனக் கட்டி அணைத்தனள். ஏந்தினன் இந்திரன். தாங்கிய கையுடன் தையலைத்தழுவி அமளியிற் கடத்தி அருங் கலையுடனே அணைந்தனன் பன் முறை (ஒரு முறை யல்ல). உரு குலவிக் இன்பக்கடலில் இறங்கிய மாது அன்பே வாய்த் தன் பெருந் தேவுடன் கூடிக் கூ குலவி ஆடியாடி அகங்களி கூர அவனே தானாய் தானே அவனாய் ஓருருவாகிப் பெருங்களிப்புடனே. பெற்றனள் போகம், கலவியிற் களைத்து மண்ணையும் மறந்து தன்னையும் மறந்தாள்!' ய மன்னன் பாண்டுவின் மனைவி மாற்றான் மடியிலே இந்த மயக்கம் காணுகிறாள், இதை நமது வைதீகப் பித்தர்களிடம் காட்டினால்... "குடிகேடா! குருடா! பத்தினியைப்பழிக்காதேடா!" என்று குதிப்பார்கள், வரத்தால் பிறந்த குழந்தைகளப்பா பாண்டவர்கள் என்று பழைய கள்ளையே புதிய கலயத்தில் ஊற்றி கால க்ஷேபம் செய்வார்கள். இந்திரன் - குந்தி இவர் களின் இன்பலோக வர்ணனையை அய்யங்கார் ஒருவரே தீட்டியுள்ளதை நாம் எடுத்து நீட்டினால் “பாரா முகம் உன்னையே" என்று வெறுத்துப் பேசிவிட்டு பாஞ்சாலி, குந்தி சிலைகளுக்கு முன் நின்று "பத்தினியே உன் போல் இத்தரை மீதினில்” என்று பாட ஆரம் பித்து விடுவார்கள். . என் செய்வது ? எதிர்காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/44&oldid=1701851" இலிருந்து மீள்விக்கப்பட்டது