பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னை நாகம்மையார்! பெரியார் ராமசாமி அவர்கள் இளைஞர் ராமசாமி யாக இருந்த காலம் வரலாற்று ஆசிரியர்களுக்கு சுவை யூட்டும் பகுதி. . பொதுநலவாழ்வில் அவருக்கு கிடைத்த பட்டம் பெரியார். இளமையில் சுயநல வாழ்வில் 'மைனர்- காலி என்ற மகுடங்கள் ராமசாமிக்கு அணிவிக்கப் பட்டிருந்தன. அவருடைய பத்தொன்பதாவது வய தில் நாகம்மையார் வாழ்ககைத் துணைவியாக வந்து சேர்ந்தார்கள். பருவகால மாறுதல்கள் அவர்களைப் பிணைப்பதற்கு முன் விளையாட்டுப் பருவத்திலேயே அந்தக் கொழுந்து உள்ளங்கள் கூடிக் குலாவிக் கொண்டன, . "நான் உன்னையே மணப்பேன்; வேறு யாரை யும் மணக்க மாட்டேன்" இந்த உறுதி தளும்பும் காதல் தொனி அந்த இளம் வீணைகளில் ஒரே சமயத் தில் அதிர்நது ஒலித்தது, இராம சாமிக்கு வயது 191 வாலிபம் அவருடைய உடற்கட்டில் நர்த்தனம் செய்த காலம்! பிள்ளையாண்டானுக்கு சீக்கிரத்தில் ஒரு கட்டையைக் கட்டிவிட வேண்டும்' என்று பெற்றோர் கள் தீர்மானிக்கிற அளவுக்கு வாலிப ராமசாமி “நல்ல பிள்ளை" என்று பெயர் எடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/45&oldid=1701852" இலிருந்து மீள்விக்கப்பட்டது