பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 நாகம்மையின் 13-வது வயதில் பெண் கேட்கப் பலர் வந்துவந்து போயினர். அம்மையாரின் அபிப் பிராயத்தை அசைக்க முடியவில்லை. ராமசாமியின் உரு வம் அழியாத ஓவியமாக தன் உள்ளத்தில் தீட்டப்பட் டிருப்பதை அவர்கள் காட்டத் தவறவில்லை. அந்தப் புது மலரைப் பறித்துக்கொண்டுபோக ஒரு ஆசைக் காரத் தாத்தாவும் வந்தார். இரண்டு மனைவிகளை இழந்த அந்தக் கிழம், வாலிப ஓய்யாரங் கொட்டிக் கொண்டு சம்பந்தம் பேச வந்தது, நாகம்மா நெருப்பு மொழிகளை இறைத்தார்கள். அந்த அனல் வீச்சில் "மணந்தால் ராமசாமியை மணப்பேன்; இன்றேல் தற்கொலை செய்துகொண்டு இறப்பேன்," என்ற தீப் பொறிச் சொற்கள் தெரித்துக் கிளம்பி பெற்றோர் களின் பிடிவாதத்தைத் தீய்த்தன, 'லாயத்திலே தள்ளி அடைக்கப்படும் குதிரைக்கும் கனைத்திட உத்தர வுண்டு' என்ற புரட்சிக் கவிதைக்கு எடுத்துக்காட்டாக சிறுமி நாகம்மா நின்றார்கள். கிழ மாப்பிள்ளை வந்த வழியே நடையைக் கட்டினார்; 13 வயது சிறுமி தன் வாழ்வைத் தானே பண்படுத்திக் கொண்டார், இங்கே ராமசாமியாருக்கு செல்வக் குடும்பங் களில் பெண் தேடினார்கள். "சீமான் வீட்டுச்சிங்காரி தேவை யில்லை. என் சிந்தையில் குடியேறியவள் தான் என் குடும்ப விளக்காக வேண்டும்" என்று 'கூறி விட்டார் ராமசாமி. தாய் தந்தையர் முடிவுப்படிதான் மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, மணமக்களை மந்தை மாடு கள் சேர்ப்பதென எண்ணியிருந்த காலமது. ஆம் 1898! அப்பொழுதே காதல்புரட்சி செய்தவர்கள் ராமசாமி - நாகம்மா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/46&oldid=1701854" இலிருந்து மீள்விக்கப்பட்டது