பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வெற்றியின் சின்னமாக அவர்கள் திருமணம் அமைந்தது. வெள்ளத்தினோடொரு வெள்ளமாய்க் கலந்து விட்ட அவர்கள் இன்பவாழ்வு, முப்பத்திஐந்து ஆண்டு கள் நடைபெற்றது. 1933 வரையில்! ராமசாமி -நாகம் மா குடும்ப வாழ்க்கையில் சிந்தனையைக் கிளறும் நிகழ்ச்சிகள் - பகுத்தறிவைத் தூண்டும் பல குறும் புகள்-பெண் உயர்வுக்கான சம்பவங்கள் பல ! பல ! வாலிப ராமசாமி - வயதேறிய ராமசாமிப் பெரியா ராக ஆனகாலத்திலும் அம்மையாரிடம் கொண்டிருந்த அன்பு வரண்டு விடவில்லை. வற்றாத உயிராறாகவே பெருக்கெடுத் தோடியது. ' கிழவர் ராமசாமியைப் பார்த்து யாராவது“பெரிய வர் ; வயதேறியவர் ; கிழவர்," என்று சொன்னால், உட னே அவர் நாகம் மையாரைக் காட்டி "என்னை அப்ப டிச் சொல்லாதீர்கள் அந்தம்மாளுக்குக் கோபம்வரும்" என்பார். அப்பொழுது பார்க்க வேண்டுமே நாகம் மாவின் ஆனந்தத்தை ! அன்பு தவழும் கண்களால் பெரியாரின் வார்த்தையை ஆமோதிப்பார் அம்மை யார் ! ஆமாம்! அவர்கள் உள்ளத்தால் இளங் காதலர் கள் தான் ! இல்லற வாழ்விலும் பொது வாழ்வி லும். நீங்காத துணையாக நின்ற நாகம் மையாரை 11-5-1933-ல் பெரியார் இழந்தார். ஆனால் அவர் துக்கத்தால் துவண்டு போய்ப் படுத்துவிட வில்லை. மறு நாளே 125-1933ல் பெரியார் திருச் சியில் ஒரு கிறிஸ்துவ திருமணத்தை 144 செக்ஷனை மீறி நடத்திவைத்து கைது செய்யப்பட்டார். காதலை யும் மீறிய கடமை, பெரியாரின் வாழ்வுக்கே புது இலக் கியம் கோர்த்தது. ய க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/47&oldid=1701855" இலிருந்து மீள்விக்கப்பட்டது