பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையல்ல - கண்ணீர்க்கடல் ! [செல்வத்தை நினைக்கையிலே சிந்திய கண்ணீர்த்துளிகள்.] இருட்டறையில் இருகண்கள் மூடிக்கொண்டு, உருட்டுகின்றார் உலகத்தார் என்றுசொல்வோர் அழுந்தட்டும் அறியாமை! அதையுணர்த்த முழங்கிற்று பெரியாரின் முரசு ஒலி அவ்வழி வந்தோன்...அன்பன்...தோழன் அருமைச்செல்வம்...... அறிவியக்க வீரன் ஞாயிற்றின் நல்லொளியில் ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல், அங்கே... கிழக்கினில் கிளம்பிய காலைக்கதிரவன் வெடுக்கென வீழ்ந்தான்...கடலில் என்றால், வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ! இருள் நீங்கி ஒளிபெறவே இந்நாடு முந்துங்காலை மருள் சூழ்ந்த சாவுமோகம் இளங்கதிரை

மறைத்ததுவே !

குன்றெடுக்கும் நெடுந்தோளான் குலத்தினனே ! கொன்றொழிக்கும் கொடுவாளால்... குள்ளநரி ஆரியத்தை, குலைபிடுங்க குகைவிட்டு வெளிவந்த சிங்க ஏறே ! மலைத்தோளா! மாணிக்கக் குன்றே ! பழச்சுளை உன்பேச்சு ! பார்வையிலே பனிவீச்சு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/48&oldid=1701856" இலிருந்து மீள்விக்கப்பட்டது