பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பார்ப்பனீயம் உனைப் பார்த்துவிட்டால் ? படைகண்ட கோழைபோல் நிலைகுலைந்து போகுமே. நீ போய்விட்டாய்...நின்னொடு நின் புகழ்போமோ? தீ வைத்தாய் ஆரியக்காட்டில்! அது படபடென வெடிக்கையிலே பார்க்காமல் மறைந்து பன்னீர்ச்செல்வமே ! உன் பால்வடியும் முகமெங்கே? பாண்டியன் மீசையெங்கே! பசியேறிய வெறிகடலின் பாழலைகள் ஓய்ந்தனவா உனைத்தின்று! 46 தின்னட்டும் தின்று மகிழட்டும்...என்னை விட்டாய். எண்ணட்டும் திருவிடத்தா'ரென்றே எங்கொளிந்தாய்? பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும் பாட்டாளிக் குணத்தினை எங்ஙனம் கற்றாய்? கோமானே ! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர் ஓமான்கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும் ! பழுதற்ற திராவிடப் பொன்னாடு ! ஆரிய மதுவுண்ட மக்களெல்லாம் விழித்தெழுதல் இதுகாண்டல்... நின்பணிக்கு காணிக்கையாம். சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும் வெற்றி எமக்கென்றே வெளிக்கிளம்பி விட்டோம்!" பஞ்சைகளல்ல நாங்கள் தஞ்சைக் காவலன் சந்ததியார் ! வீழ்ந்திட நேரிடினும் நின் செயல்பாடி வீழ்ந்திடுவோம். ("முரசொலி" 'மாலைமணி' யில், வெளிவந்த கட்டுரைகள்.) அன்பன் அச்சகம், சென்னை-1. 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/49&oldid=1701857" இலிருந்து மீள்விக்கப்பட்டது