பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கனல் பொழிகிறது - அனல் கிளம்புகிறது சிங்கம் சினங் காட்டுகிறது. ஆம். கவிஞரின் பேனா முனை ஈட்டியாகிறது. இதோ கவிஞர் இல்லமொன்றில் நுழைகிறார் இனிய நறுமணம் பரவுகிறது. இதயகீதம் புறப்படுகிறது. 66 தொண்டையினில் ஒன்றுமே அடைக்கவில்லை துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்கலுற்றான் அண்டையிலே மங்கை போய் அத்தான் என்றாள் அத்தானா தூங்கிடுவான் ' அருகில் உட்கார்'என்றான்'. காதல் இலக்கியம்-நெஞ்ச ஓவியம்-கண்விருந்து கவிதையிலே தேன் மழை ! புயல் நடை மாறித் தென்றலாகத் தவழ்கிறது கவிஞரின் பேனாமுனை ! தாமரை பூத்த குளத்தைக் காண்பார்- அங்கே முகத்தாமரை தோன்ற முழுகிடும் கோமளவல்லியைக் காண்பார், கொள்ளை கொடுத்த உள்ளத்தினன் குப்ப னையும் காண்பார். ( குளத்தைக் கண்ட அவர் குதூகலத்தாலேயே முழுகிவிட மாட்டார்...' வியர்வைக்குளம்' எனத் தலைப்புக் கட்டுவார். தொழிலாளியின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் "இவ்வுலகு உழைப்பவர்க்கே என்பதைக் காண்பார். DP சிற்றூர்-வரப்பெடுத்த வயல்-ஆறு தேக்கிய நல் வாய்க்கால்- அயோத்யாபுரி வர்ணனையாகக் கொள்ள மாட்டார். நிறையுழைப்புத் தோள்களின் வலிமை யால் வந்த வளமென்பார். காக்கையைக் காணுவார்- 'சனிபகவானின் வாகனமே' எனப் பாடமாட்டார். காக்கையிடத்திலுள்ள ஒற்றுமைகண்டு வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/7&oldid=1701799" இலிருந்து மீள்விக்கப்பட்டது