பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 என அறிவு நல்குவார். நடத்தினால் பயனுண்டு" மண் - மரம்-செடி-கொடி-பறவை - மிருகம் - மனிதன்- எல்லாம் கவிஞர் பாரதிதாசனின் கவிதைக் கடலிலே மிதக்கும் படகுகள். இராமனைப் பாடினால்தான் கவிதை-காளி வரம்பெற்றால்தான் கவிஞன்-இந்த நிலையைத் தலைகுப்புறக் கவிழ்த்தவர் பாரதிதாசன். அவருக்கு மணிவிழா அறுபது ஆண்டுகள் பறந்து விட்டன. மிச்சமிருப்பது நாற்பது ஆண்டுகள் மனித வயதின் கணக்குப்படி! சாகாத கவிதைகள்- இளைக் காத எழுத்துக்கள் - நோய் தழுவா இலக்கியங்கள் கவி ஞரால் தமிழ் நாட்டுக்குக் கிடைத்திருக்கின்றன. அவருக்கு செய்ய வேண்டிய கடமையைத் தமிழகம் ஒருவாறு செய்துவிட்டது. நன்றி தெரிவித்து விட் டது. ஆனால் இது போதாது. நிதியளிப்பதல்ல கடமை ! மணிவிழா அல்ல நன்றி! 6 6 த வெள்ளம்போல் தமிழர் கூவிடம் வீரங்கொள் கூட்டம் உள்ளத்தால் ஒருவரே! மற்றுடலினால் பல ராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே என வையம் கலங்கக்கண்டு களிக்கும் நாள் எந்த நாளோ!" அந்த நாளை விரைவில் அமைப்பதுதான் நாம் அவருக் குக் காட்டும் நன்றி - கடமை - எல்லாம்! நிதி விழாவும்- கடமை-எல்லாம்! மணிவிழாவும் கவிஞரைத் தமிழகத்திலே நன்றாக உலவ விடும் மார்க்கங்கள். அவரது கவிதைகளை தமிழரின் உள்ளங்களிலே ஏற்றிவைக்கும் ஏற்பாடுகள். மணிவிழா இதோடு முடிவதல்ல, முடியக் கூடாது. ஆண்டு தோறும் கவிஞருக்கு விழா நடத்த வேண்டும். கவிஞர் இருக்கும் வரையில் மட்டுமல்ல! அவர்தான் சாகாதவராயிற்றே ! சாகித்யகர்த்தா தியாகராஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/8&oldid=1701800" இலிருந்து மீள்விக்கப்பட்டது