83
பிறந்த பொன்னாட்டை
மறக்கக் கூடாது
எவரும் தான் பிறந்த மண்ணை மறப்பது கூடாது. வெங்கட்ராமனும் மறக்கமாட்டார் என்றே நம்புகிறேன். இந்த மண்ணோடுள்ள உறவு தான் நின்று நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கும். தமிழ் நாட்டின் தேவைகளையும், அவசியங்களையும் உணர்ந்துள்ள அவர் இதுகாறும் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்து தமிழகத்துக்கு நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த நாம் கொடுத்துப் புகழெய்தியவர்கள்; வாங்கிப் பழகியவர்கள் அல்ல. நாம் கேட்பது பொருளாதார நியாயமே--அரசியல் நியாயம் கோரவில்லை.
இயற்கைக் கனிப் பொருள்கள் கிடைக்குமிடத்தில் தொழிகள் துவக்கப்பட வேண்டுமென்ற கோட்பாடே கல்லூரிப் பொருளாதார வகுப்பில் படித்திடும் ஆரம்பப்பாடம். இந்த வகையில் தான் சேலம் உருக்காலை திட்டத்தை வலியுறுத்துகிறோம்.
ஒருவர் புகழெய்திவிடுகிறார் என்பதால் இந்த ஆரம்பப் பொருளாதாரப் பாடத்தை மறந்துவிட இயலுமா?
இதே வகையில் தான் தூத்துக்குடி ஆழ்க்கடல் துறை முகத்திட்டம் பற்றியும் வலியுறுத்துகிறோம்.
நாட்டின் வரலாற்றில் பரபரப்பானதொரு காலம் இது. இந்தியாவின் கூட்டமைப்பு அரசியல், பல்வேறுபட்ட