பக்கம்:உணர்வின் எல்லை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

உணர்வின் எல்லை

சொல்ல வேண்டும். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பலவற்றைத் தழுவியும், இதிகாச புராணங்களைத் தழுவியும் பல நாடகங்களை இப்பெருந்தகையார் எழுதியுள்ளார். துன்பியல் நாடகங்களையும், சமூக வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாடகங்கள் பலவற்றையும் எழுதிப் பெருமை கொண்ட பெரியாரும் இவரே. இப்பெரியார் காட்டிய வழியிற் சென்று தமிழ் நாடகக் கலைக்குத் தொண்டாற்றி இன்று நம்மிடையே புகழுடன் விளங்குவோர் பலர்.

இவ்வாறு முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் தமிழ் நாடகக் கலைக்கு மிகச் சிறந்ததொரு எதிர்காலம் இருப்பது திண்ணம். கவ்வி கற்கும் இளைஞர்களிடத்தும், கலையார்வம் மிக்க பொதுமக்களிடத்தும் தமிழ் நாடகக் கலைக்கு உள்ள செல்வாக்கினைக் கருதும் போது, உலக அரங்கிலேயே தமிழ் நாடகக் கலை தன் புகழ்க் கொடியை உயர்த்தும் நாள் அண்மையிலேயே உள்ளதெனக் கருதலாம்.