பக்கம்:உணர்வின் எல்லை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

யில் அதனினும் பெரிய புரட்சி ஒன்று உண்டோ ? ‘ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாய்,’ ‘ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும்படி அவர் பாடிய நூலுக்கு இணை முன்னும் இல்லை; பின்னும் இல்லை,’ என்பது யாவரும் ஒப்பக்கூடிய உண்மை அன்றோ?

ஆங்கில இலக்கிய ஆராய்ச்சித் துறையில் புகழ் மிக்க அறிஞர்களுள் ஒருவராகிய ஹட்ஸன் என்பார் தம் நூலில் ஓரிடத்தில், ஒப்புயர்வற்ற தனிப்போரிலக்கியத்தின் தன்மைபற்றி மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே ஒரு சிறந்த இலக்கியத்தின் அடையாளம், அது எவையேனும், சிலவற்றையேனும் புத்தம் புதியனவாகவும் சுயமாகவும் கூறுவதும், அவ்வாறு கூறுவதிலும் தனக்கே உரியதும் புதியதுமான வழியில் அவற்றைக் கூறுவதுமே ஆகும்.[1]

இவ்வுண்மையை உரைகல்லாக வைத்துக் கொண்டு பார்க்கும்பொழுது வள்ளுவர் குறளின் வானுயர் சிறப்புப் புலனாகும்.

நூலின் யாப்பிலேயே ஒரு புது நெறியல் சென்ற வள்ளுவர், தம் இலக்கியத்தின் நோக்கிலும் போக்கிலும், புதுமையம் புரட்சியும் விளங்குமாறு


  1. The mark of a really great book is that it has something fresh and original to say, and that it says this in a fresh and independent way W. H. Hudson—An Introduction to the study of literature.

7