பக்கம்:உணர்வின் எல்லை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

உணர்வின் எல்லை

வள்ளுவர் வகுத்த இப் புரட்சி இலக்கணத்திற்கோர் இலக்கியத்தைத்தான் நெஞ்சையள்ளும் சித்திரச் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.

‘மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்—வையைக்கோன் கண்டளவே தோற்றான்; அக் காரிகைதன் சொல்செவியில் உண்டளவே தோற்றன் உயிர்,’

என்ற இளங்கோவின் சொல்லோவியமும்,

‘தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின்நீர்

கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ!’

என்ற கவிஞரின் வாக்கும் இவ்வுண்மையைத் தெளிவுறுத்துகின்றன.

இவ்வாறே வறுமையால் வெந்து மடியும் நிலையில் நாட்டில் யாரேனும் தோன்றி, ‘இதெல்லாம் ஈசன் செயல், அவன் செயலுக்கு எதிர்ச்செயல் ஏது? ஒருவன் பிச்சைக்காரனாகவும், இன்னொருவன் பிரபுவாகவும் இருக்கவேண்டும் என்பதும் அவன் திட்டம்,’ என்று ‘தர்ம உபதேசம்’ செய்தால், கேட்பார் நெஞ்சில் எத்தகைய புரட்சித்திப் பொங்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் வழி காட்டுகிறார்:

‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.’

‘உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப்போல எங்கும் அலைந்து கெடு-