பக்கம்:உணர்வின் எல்லை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

உணர்வின் எல்லை

வாணியின் வடிவம்

பாரதியார் வாணிக்குப் புதிய வடிவம் ஒன்று கற்பித்துள்ளார். கலைமகளுக்கு அடையாளம் கூற வந்த கவிஞர்களெல்லாம், ஒரு கையிலே ஏடு காணப்படும்; மற்றாெரு மலர்க்கரத்திலே மணி வடம் மிளிரும்; பிற இரு கரங்களிலும் வீணை விளங்கும், என்று கூறியுள்ளார்கள்; ஆனால், நம் வரகவியோ, வேறு ஒருவிதமாக வாணியின் வடிவை விளக்கி விளம்பியுள்ளார்.

கலைத் தெய்வத்திற்கு, ஞானமே மேனி, சிந்தனையே கூந்தல்; வேதமே விழி; வாதம் தருக்கம் முதலியவைகளே செவிகள் , துணிவே தோடு; போதமே நாசி ; சாத்திரமே வாய் ; கற்பனேயே இதழ்; காவியமே இருதயம்; சிற்பம் முதலான சாத்திரங்களே திருக்கரங்கள், என்று ஏட்டிலே-கண்ணுக்கு அன்றி-கருத்திற்கு மட்டும் புலனாகும் எழில் மிக்க சொல் ஒவியம் தீட்டியுள்ளார்:

‘வேதத் திருவிழியாள்; -அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட்டாள்
சீதக் கதிர்மதியே-துதல்
சிந்தன யேகுழ லென்றுடையாள்;
வாதத் தருக்கமெனுஞ்-செவி
வாய்ந்நற் றுணிவெனுந் தோடணிந்தாள்;
போதமென் னுசியினுள் ;-நலம்
பொங்குயல் சாத்திர வாயுடையாள்.
‘கற்பனைத் தேனிதழாள் ;-சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினுள்;