பக்கம்:உணர்வின் எல்லை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்தும் கலை

113

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைகிய பலர்புகழ் சிறப்பிற்

புலவர் பாடாது வரைகவென் னிலவரை![1]

என்றன்றோ முழங்கினான்? பசிப்பிணி மருத்துவராய், பண்பாட்டின் காவலராய் வாழ்ந்த புரவலர் பெருமக்களை வாழ்த்த நாளும் விழைந்தனர் பழம் தமிழ்ப் புலவரும். அவ்வாறு அவர்கள் தம் வரிசையறிந்து வழங்கும் வள்ளியோரைப் போற்றாமல் ஆற்றநாள் போக்கிவிட்டமை உணர்ந்த பொழுது அவர்கள் உள்ளம் கடலெனக் குமுறியது!

முன்உள்ளூ வோளைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கென் உள்ளம்! போழ்கென் நாவே!
பாவூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே![2]

என்ற உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் புறப்பாட்டடிகளை மறத்தலும் ஒல்லுமோ!

இத்தகைய சூழ்நிலையில் வாழ்வாங்கு வாழ்ந்த சங்ககாலப் புரவலர்களை, அவர்கள் கைவண்மையின் திறங்கண்ட கவிஞர் பெருங்கூட்டம் வாழ்த்தியிருக்கும் வாழ்த்திலேதான் எத்தனை எத்தனை வகை! சுவை! பயன்!

தம்மைப் போற்றிப் பரந்த பெருந்தகையோரைச் சிலவாகிய சொற்களாலேயே எளிய முறையிலேயே வாழ்த்துவதைச் சங்கப் புலவர் சிலரிடம் காணலாம். அப்படி வாழ்த்தும் பொழுது, ‘பலகாலம் நீ


  1. புறநானூறு 132:1-3.
  2. புறநானூறு, 72; 13-16.