பக்கம்:உணர்வின் எல்லை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்தும் கலை

115

‘படுதிரை
‘நீர்சூழ் நிலவரை யுயரநின்
சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே!’[1]

‘வாளம் ருழந்தநின் தானையும்
சீர்மிகு செல்வமும் ஏத்துகம் பலவே!’[2]

‘நின்வலன் வாழியவே!’[3]

‘அவன் தான் வாழியவே !’[4]

‘வாழ்கநின் வளனே!’[5]

‘வாழ்கநின் கண்ணி!’[6]

எனவரும் சங்க இலக்கிய அடிகள் இவ்வுண்மைக்குச் சான்று பகரும்.

சங்கத் தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் அடியார்களாய் வாழ்ந்த உண்மை உலகறிந்தது. வான விதியில் வலம்வரும் இருபெருஞ் சுடர்களாய் விளங்கும் ஞாயிறும் திங்களும் அவர்தம் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட பேரொளி - விளக்கங்களாகும். எனவே, தாம் வாழ்த்த விரும்பிய தகவுடையோரை, ‘வெங்கதிரோனும், தண்டதியமும் போல நீடு வாழ்க!’ எனவாழ்த்த முனைந்தது அவர்தம் தமிழ் நெஞ்சம்.

‘தண்கதிர் மதியம் போலவுத் தெறுசுடர்

ஒண்கதிர் ஞாயிறு போலவும்
  1. புறம். - 160
  2. 2-4 புறம்: 161; 161; 171
  3. 2-4 புறம்: 161; 161; 171
  4. 2-4 புறம்: 161; 161; 171
  5. பதிற்றுப்பத்து : 24 ; 30 ; 36 : 14; 37 ; 1 ;
  6. பதிற்றுப்பத்து : 24 ; 30 ; 36 : 14; 37 ; 1 ;