பக்கம்:உணர்வின் எல்லை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

உணர்வின் எல்லை

மன்னிய பெருமதி நிலமிசை பரனே!'[1]

'அங்கண் விகம்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோ டுடனே!'2

'முந்தீர் நாப்பண் நாயிறு போலவும்
பன்மீ னடுவட் டிங்கள் போலவும்
பூந்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி'[2]

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழாரும், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் பாடியுள்ள புறப்பாடல்களின் பகுதிகளாகும் இவை இரண்டும்.

பகலவனிடத்தும் பால் மதியத்தின்பாலும் ஈடுபாடு கொண்டிருந்தது போலவே, நீலவானத்தில் அள்ளியெறிந்த நித்திலங்களென ஒளி உமிழும் விண்மீன்களுக்கும், மன்பதை உய்யப் பொய்யாது பெய்யும் மாமழைக்கும் பழந்தமிழ்ப்புலவர் தம் நெஞ்சைக் காணிக்கையாக்கியிருந்தனர். அதனால், தம் நெஞ்சில் நீங்காதுறைந்த நற்றமிழ்ச் செல்வரை நலமுறப் போற்றும்போதும், 'எண்ணற்ற விண்மீன்கள் போலவும், தண்ணிய மாமழை போலவும் பன்னெடுங்காலம் வாழ்வீராக!' என வாழ்த்தினர்.

  1. 1-2 புறம்: 6, 56.
  2. 3. மதுரைக் காஞ்சி, 763-70.