பக்கம்:உணர்வின் எல்லை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உணர்வின் எல்லை

எனவரும் சங்கத் தமிழ், சோர் வளர்த்த தீந்தமிழ். அரும்பெறல் தலைவரை வாழ்த்தும்போது அவரை ஈன்ற பெருமக்களைச் சேர்த்து வாழ்த்தலும் செந்தமிழ் நாட்டுப் பண்பாடு.

'சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்!நின் தந்தை

தாய்வா ழியர்நிற் பயந்திசி னேரே!' [1]

ஒரு சிறைப்பெரியனார் திருவாயால், நாஞ்சில் வள்ளுவன் பெற்ற நல்வாழ்த்து இது.

வாழ்த்துப் பெறும் தலைவன், தொடர்ந்து அவ்வாழ்த்திற்கு உரியனாய் விளங்கும் வண்ணம் அறநெறி காட்டி அறிவுரை கூறலும், 'அஞ்சொல் நுண்டேர்ச்சிப் புலவர்' நெறி,

'ஈவோ ரரியரிவ் வுலகத்து

வாழ்வோர் வாழவவன் றான்வா ழியவே!

என்பது போன்ற பாடல்கள் பல, சங்க இலக்கியங்களில் காணலாம்.

வாழ்த்தையும் வசையாக்கும் திட்பமும் நுட்பமும், சொல்லேர் உழவர்க்குண்டு. சான்றாக, புறம் 166, 188 முதலிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

பல்வகையான வாழ்த்து வகைகளுள்ளும் தலைசிறந்த ஒன்றை, ஒளவைப் பெருமாட்டியாரின் திருவாக்கில் காண்கின்றோம். தான் வாழ்வதினும் தண்டமிழ்ப் புலவர் நீடுவாழ்வது மேலெனக்கருதிய அதிகமான், 'ஆதல் தன்னகத்து அடக்கி, பெருமலை


  1. 1-2- புறம். 137, 171.