பக்கம்:உணர்வின் எல்லை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. மருத நிலத் தலைவன்

இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்வு நடத்திய பெருமக்கள் சங்க காலத் தமிழ் மக்கள். இவ்வுண்மை அவர்தம் இலக்கியங்களாலும், வாழ்க்கை நெறிமுறைகளாலும் இனிது புலனாகும்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட தமிழ் கூறு நல்லுலகத்தை, இயற்கை நில அமைப்புக் காரணயாக ஐந்து வகையாகப் பிரித்தனர் பழந்தமிழ்ச் சான்றோர். அவற்றுள் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும், முல்லையும் குறிஞ்சியும் முறைமை 39-ல் திரிந்த வெம்மை மிக்க நிலம் பாலை என்றும் பெயர் பெற்றன.

இவ் வைவகை நிலங்கட்கும் அவ்வந் நிலங்களின் தன்மைக்கு இயைந்த ஒழுக்கங்கள் இவை இவை என வகுக்கப் பெற்றன. குறிஞ்சி நிலத்திற்குரிய சிறந்த ஒழுக்கம் தலைவனும் தலைவியும் கூடி நுகரும் காதல் இன்பம் என்றும், முல்லை நிலத்திற்குரிய சிறந்த ஒழுக்கம் பிரிந்த தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருக்கும் பொறை என்றும், மருத நிலத்திற்குரிய சிறந்த ஒழுக்கம் தலைவன்பால் தலைவி ஊடி