பக்கம்:உணர்வின் எல்லை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

129


வருத்தும் கொடுமை-அவர் துயர் உணராது வாழும் தீய பரத்தைம-உனக்கு வேண்டா!'

'செம்மால்! வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்த குறிஎன்வாய்க் கேட்டொத்தி!
கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
வென்றிமாட் டொத்தி பெரும!மற் றொவ்வாதி
ஒன்றினேம் யாம்என் றுணர்ந்தாரை நுத்தைபோல்
மென்றோள் நெகிழ விடல்!
பால் கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கொள்காக்
கோல்செம்மை ஒத்தி! பெரும!மற் றொவ்வாதி
கால்பொரு பூவிற் கவின்வாட நுந்தைபோல்
சால்பாய்ந்தார் சாய விடல்!
வீத லறியா விழுப்பொருள் நச்சியார்க்
கீதல்மாட் டொத்தி பெரும!மற் றொவ்வாதி
மாதர்மென் நோக்கின் மகளிரை நுந்தைபோல்

நோய்கூர நோக்காய் விடல்.

மருதக் கலியை மேற்போக்காகப் படிப்பவர்க்கு, 'பழந்தமிழ் - மகள் அடுப்பூதி வாழும் அடிமையாகவே இருந்தாள் ; தலைவனுடைய பரத்தைமைக்கு அவள் தயங்காது உடன்பட்டிருந்தாள்; தலைவியின்பால் தலைவனுக்கு இருந்த காதல் ஆழமானதன்று' என்றெல்லாம் தோன்றும். ஆனால், ஊன்றி ஆராயும்போது இவ்வையங்கள் அகலல் உறுதி. மருதத்திணைப் பாடல்கள் பல நமக்குக் காட்டும் காட்சிகளால் சிற்சில உண்மைகள் தெள்ளத் தெளியப் புலனாகின்றன. தன் அன்பைப் பெற விழையும் பரத்தையர் பலர் இருக்கத்தலைவன் தலைவியின் வருத்தம் அறிந்தவுடனே அவளிடம்

9