பக்கம்:உணர்வின் எல்லை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உணர்வின் எல்லை

திரட்டிப் பின்வரும் பாடல்களில், சூத்திரம்போலச் சாற்றியுள்ளார்.

“வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள்;
     வீணை செய்யும் ஒலியி லிருப்பாள்;
கொள்ளை யின்பங் குலவு கவிதை
     கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
     ஓதும் வேதத்தி னுண்ணின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
     கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.
“மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்;
     மக்கள் பேசும் மழலையி லுள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்

     கிளியி னுவை யிருப்பிடங் கொண்டாள்.”

................

பின்னர், பாரதியார் மாந்தர் போற்றும் அம் மலரவள் மாண்பைப் பற்றி விவரித்துள்ளார்.

மலரவள் மாண்பு

‘முடிசார்ந்த மன்னரும், அருமறை அந்தணரும்’ அடி பணியும் தெய்வம் அறிவுத் தெய்வம்; விண் கண்ட தெய்வம் பல்கோடியுள்ளும் கண் கண்ட தெய்வம்; ‘உய்வம்’ என்ற உட்கருத்து உடையோருக்கு உயிரனைய தெய்வம்; எடுத்த கருமம் இனிது கை கூடுமாறு கருணை புரியும் தெய்வம்; மெய் வருந்தி உழைப்பவருக்கு உய்வைத் தரும் தெய்வம்; கலைமலி கவிஞர் தெய்வம்; தெய்வத் தன்மையுடையோர்