பக்கம்:உணர்வின் எல்லை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

133

மறுத்தாள். அப்போது அவள் கூறிய சொற்கள் நுட்பமும் திறனும் வாய்ந்தவை. நாகரிகமாகக் கூறித் தலைவன் மனம் நொந்து வருந்தும்படி செய்தாள். அந்த அழகே அழகு!

தலைவன் மருதத்தலைவன் அன்றே? எனவே, தோழி அவனுடைய மருத நிலத்தைச் சிறப்பிப்பவள்போல ஓர் எருமையின் வாழ்வை எடுத்துரைத்து, அதன் தெரியற்ற செயலைக் கண்டிக்கும் உவமை, வாயிலாகத் தலைவனுடைய தீய போக்கைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டினாள். ‘உமது ஊரில் தனக்கு இயல்பான சேற்றில் நின்று வெறுத்துவிட்ட எருமை, ஊரார் உறங்கும் நள்ளிரவில் வலிய கட்டையறுத்துச் சென்று, கூர்மையான முள்வேலியைத் தன் கொம்பால் களைந்து, நீர் மிகுந்த வயலில் பாய்ந்து மீன்களை ஒருங்கே அஞ்சி ஓடச்செய்து, அழகிய வள்ளைக்கொடிகளை மயக்கிவிட்டு, தாமரை மலரைத் தின்னும்,’ என்றாள். இவ்வாறு கூறியது வாயிலாகத் தோழி, ‘தலைவரே நீர் தலைவியோடு வாழும் இயல்பான இல்வாழ்க்கையை வெறுத்துவிட்டு, நாணத்தையும் நீக்கி, யாரும் அறியாதபடி நெறிகெட்டு நடந்து பரத்தையோடு வாழ்கின்றீர்,’ என்பதைச் சொல்லாமலே சொல்லிவிட்டாள். அள்ளூர் நன்முல்லையார் பாடிய அழகிய அகப்பாடல் இவ்வறிவுசால் தோழியின் சொற்றிறத்தையும், மனப்பண்பையும் நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.

சங்ககாலப் பரத்தை பொல்லாதவள், மிகவும் பொல்லாதவள், கலையுள்ளம் படைத்தவள்தான்;