பக்கம்:உணர்வின் எல்லை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

உணர்வின் எல்லை

சிறந்த குறிப்பொன்றை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ளல் பயனுடையதாகும்; அது வருமாறு

‘பரத்தையிற் பிரிவு வரையில் தலைவன் தலைவியர்களுடைய அன்பு தலைமைக்கருத்தாய் இருந்து இவரலாற்றை நடத்துகின்றது. பரத்தையிற் பிரிவில் தலைவியின் கற்பே இலக்காக நிற்ப, அதனைச் சுற்றிப் பலப் பல நிகழ்ச்சிகள் புனையப்படுகின்றன. எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவாதலின், பலவகைக் குறைபாடுகள் பொருந்திய பரத்தையிற்பிரிவிலும், கற்பு நெறியின் சிறந்த தன்மை புலவர்களாற் புலப் படுத்தப்பட்டிருத்தல் அறிந்து மகிழ்தற்கு உரியதாகும்.’

மருதத்திணை—நுட்பமான அறிவின் பயனாக விளையும் சிறந்த ஊடல் ஒழுக்கம்—பரத்தையின் பிரிவை ஒட்டித்தான் நிகழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அறத்தையும் கலையையும் தம் இரு கண்களாகப் போற்றிய திருவள்ளுவப் பெருந்தகையார். காதற்சுவை ததும்பப் பாடியுள்ள காமத்துப்பாலில் பரத்தையிற் பிரிவிற்கு ஒரு சிறிதும் இடம் தராது ஊடலைப் போற்றியுள்ள திறமை இதற்குத் தக்க சான்றாகும். மேலும்,

திருவள்ளுவர், ஊடல் இன்பத்தின் சிறப்பினை உணர்த்துவதற்கே புலவி, புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்று, மூன்று அதிகாரங்களைத் தம் நூலின் முடிவில் அமைத்துள்ளார். ‘புலவியஃ தெவ-