பக்கம்:உணர்வின் எல்லை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

139

னோ வன்பிலங்கடையே’ என்று குறுந்தொகை போற்றும் இச்சீரிய பாடல் இன்பத்தை,

‘ஊடவிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங்
கூடலிற் காணப் படும்’

‘ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
நீடுக மன்னே இரா!’

‘புலத்தவிற் புத்தேணா டுண்டோ?’

‘உப்பமைந் தற்றாற் புலவி’

என்று ஊடலைப் போற்றும் திருமொழிகளெல்லாம் தமிழ்மறை மொழிகளல்லவா? இதனால் மருதத்திணைக்கு உயிர்நாடியான பாடல் ஒழுக்கத்தை அச்சான்றோர் எவ்வளவு உயர்வாகப் போற்றியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறதன்றோ? ஆனால், இவ்வளவு சிறப்பைத் திருவள்ளுவர் ஊடலுக்கு அளித்திருந்தும், அது பரத்தையிற் பிரிவு வழிப்பட்டதாகவே இருத்தல் வேண்டும் என்று குறிப்பாகவும் கூட யாண்டும் அவர் காட்டாததை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம் உள்ளம் பூரிக்கின்றது; ஊடல் இன்பம்மருதநிலத் தலைவனின் தீயொழுக்கத்தின்பாற் பட்டதாகவே இருத்தல் வேண்டும் என்ற தவறான கருத்தும் நம் மனத்தை விட்டுத் தானாக அகல்கின்றது. அம்மட்டோ ?

‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’