பக்கம்:உணர்வின் எல்லை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

7

போற்றும் தெய்வம்,’ என்ற இக்கருத்துக்கள் அப்பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன.

... ... ...

“வீர மன்னர்பின் வேதியர் யாரும்
     தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.

“தெய்வம் யாவும் உணர்ந்திருந் தெய்வம் ;
     தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்;
‘உய்வம்’ என்ற கருத்துடை யோர்கள்
     உயிரி னுக்குயி ராகீய தெய்வம்;
‘செய்வர்’ என்றொரு செய்கை யெடுப்போர்
     செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம் ;
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்.

     கவிஞர் தெய்வம், கடவளர் தெய்வம்.”

... ... ...

ஓரொருகால் அடியவர் தீய நெறியில் செல்வாராயின், அன்னாரை நன்னெறிப்படுத்த, பொன்னைத் தூய்மைப்படுத்தப் புடமிடல் போல, முதலில் துன்புறுத்திப் பின்னர் இன்பந்தருவது முறை அன்றே ? அதனாலேதான் பாரதியார், ‘தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்’ என்று திறம்படக் கூறியுள்ளார்.

தமிழ் வாணி

ஒரு பாட்டில் பாரதியார், ‘ஒளிவளர் தமிழ் வாணி!’ என்று கலைமகளை விளிக்கின்றார். ஆனால் இந்நீளுலகில் எண்டிசைக்கண்ணும் உள்ள எண்ணரு நாடுகளில் தோன்றும்