பக்கம்:உணர்வின் எல்லை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

143

என்று கூறிக் கண்ணகியுடன் கோவலன் வினையின் ஏவலை ஏற்றுப் பொழுது விடிவதற்குள் பூம்புகாரை விட்டு நீங்கி மாமதுரைக்குப் புறப்பட்டான். வழியில் கவுந்தி அடிகளைக் கோவலனும் கண்ணகியும் சந்தித்தனர். அருள் சான்ற நல்லன்னையாரது அன்பின் துணைகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் கடந்து, மதுரையை அணுகினர் கோவலனும் கண்ணகியும். அந்நிலையில் தனக்கும், தன்னால் கண்ணகிக்கும் நேர்ந்த துன்பங்களை எண்ணி உணர்ச்சி வயப்பட்டவனாய்,

‘அறியாத் தேயத்து ஆசிடை உழத்து

சிறுமை உற்றேன் செய்தவத்தீர்!’

என்று தம்பால் வந்து வருந்திய கோவலனுக்கு ஆறுதல் கூறிய கவுந்தியடிகளின் வாசகங்கள், உள்ளத்தை உருக்கும் நீர்மையன ; இராமகாதையும், நள சரித்திரமும் நாட்டு மக்கள் சிந்தனையில் ஊறியிருந்த இலக்கியச் செல்வங்கள் என்பதைப் புலப்படுத்துவன ; அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் பயன்படும் சிறப்பைச் சுட்டிக் காட்டும் திறம் படைத்தன:

கவுந்தி கூறும்: காதலி தன்னொடு
தவம்தீர் மருங்கின் தனித்துயர்! உழந்தோய்!
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழத்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ! நெடுமொழி அன்றோ ?
வல்ஆடு ஆயத்து நண்ணரசு இழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்

காதலின் பிரிந்தோன் அல்லன்: காதலி