பக்கம்:உணர்வின் எல்லை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

145

நம் நாட்டில் அன்றாடம் பத்தி நூல்கள் சிலவற்றையேனும் பாராயணம் செய்யும் பண்பாடு இன்றும் நிலவி வருகிறது. பழந்தமிழ் நூலாகிய திருமுருகாற்றுப்படை இத்தகைய பாராயண நூல்களுக்குத் தலைமை தாங்குகிறது. அந்நூலின் இறுதியில் காணப்படும் பிற்கால வெண்பா ஒன்று திருமுருகாற்றுப்படையிடம் அடியவர் உலகம் கொண்டிருந்த அரிய நம்பிக்கையைப் புலப்படுத்தும்.

‘நக்கீரர் தாமுரைத்த தன்முருற்றுப்படையைத்
தற்கோல நாடோறுஞ் சாற்றிலும்—முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்

தானினைந்த எல்லாம் தரும்,’

சென்ற சில தலைமுறைகட்கு முன்பு கூட (இப்பொழுதும் சிலரிடம் உண்டு) நம் நாட்டில் பெரிய புராணம் திருவிளையாடற் புராணம் போன்ற தெய்வீகத் தமிழ் நூல்களிடம் நம்மவர்க்கு இருந்த நம்பிக்கை பெரிது. மிகப் பெரிது! வாழ்க்கையில் எதிரிடக்கூடிய நன்மை தீமைகளை அந்நூல்களில் கயிறு சாத்திப் பார்க்கும் வழக்கம் இருந்ததாகத் தெரிகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சிறப்பாகச் சமய இலக்கியம் கொண்டிருந்த செல்வாக்கை இது புலப்படுத்தும்.

அன்றாட வாழ்வில் அல்லல்களை மறக்கவும், ஆறுதல் பெறவும், ஆனந்தம் கொள்ளவும் இலக்கியங்கள் பெருந்துணை புரிகின்றன. இதனால் அன்றோ ‘நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்’ என்று உடல்கெங்-

10