பக்கம்:உணர்வின் எல்லை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

உணர்வின் எல்லை

கும் சான்றோர்கள் ஒருமிக்கக் கருதினார்கள். இதனாலன்றோ, நல்ல நண்பர்களைப்போல நூல்களும் சிலவாகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனவாகவும் இருக்கவேண்டும்.;[1] என்று அறிவுரை பகரலாயினர்? அம்மட்டோ’ நல்ல நூல்கள் வாழ்வின் பொலிவிற்குப் புதுப்புது எண்ணங்களை வழங்குகின்றன; எவ்வாறு வாழவேண்டும் என்று கற்பிக்கின்றன ; புண்பட்டவர்களுக்கு ஆறுதல் புகல்கின்றன. கடின உள்ளம் கொண்டோரை இடித்துரைக்கின்றன; அறிவிலிகளைக் கண்டிக்கின்றன; அறிஞர்களை ஆதரிக்கின்றன;[2] என்றும் விளக்கம் தந்தார்கள்!

இவ்வாறு அன்றாட வாழ்விற்குப் பல்வகையாலும் துணை புரியும் இலக்கியங்கள் பெரும்பாலும் பல்வேறு கட்டமைச் சுமைகளால் தளர்ச்சியுறும் மனித வாழ்க்கைக்கும் புத்துணர்வும் புதுவாழ்வும் தரும் சிறப்பியல்பு படைத்தன. இவ்வியல்பு எல்லா நாட்டுச் சிறந்த இலக்கியங்கட்கும் எப்போதும் உண்டு, இவ்வுண்மையை உணர்ந்து கூறும் இருபேர் அறிஞர்களின் அனுபவ உரைகளைச் சுவை கருதியும் பயன் கருதியும் ஈண்டுக் காணலாம்.


  1. ‘Books like the friends: should be few, and well chosen’-Fullers
  2. 'They give new views to life, and teach. us tow to live; they sooth the grieved, the stubborn they chastise, fools they admonish, and confirms. the wise:'-Crabbe.