பக்கம்:உணர்வின் எல்லை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உணர்வின் எல்லை

கலைகட்கெல்லாம் தாயாகிய கலைமகளை, ‘தமிழ் வாணி’ என்று அழைக்கின்றார் பாரதியார்.

தாய் ஒருத்தி இருக்கிறாள்; அவளுக்குப் பல குழந்தைகள் உண்டு; ஒருவன் ஒரு குழந்தையைப் பார்த்து, அந்தக் குழந்தையின் அன்னையைச் சுட்டிக்காட்டி, ‘யார் அவர்கள்?’ என்று வினாவினால், அக்குழந்தை, ‘எங்கள் அம்மா’ என்று சொல்லுமே ஒழிய, அடித்தாலும் அதட்டினாலும், ‘என் தம்பிக்கு அம்மா’ என்றாவது, ‘என் அக்காளின் அம்மா’ என்றாவது சொல்லவே சொல்லாது. பல வகைகளில் கவியின் உள்ளமும் குழந்தையின் உள்ளமும் ஒன்றே அன்றே?

‘அருக்கோ தயத்திலும் சந்திரோதயம்ஒத்து அழகெறிக்கும்

திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை’

என்று கம்பரே கூறியுள்ளார்.

கலைமகளின் கண்களில் ஒன்றே—அதுவும் வலக்கண்ணே—கன்னித் தமிழ் மொழியின் உருவம் என்று வற்புறுத்திக் கூறுகின்றார், ஒரு பிற்காலப் பைந்தமிழ்ப் புலவர்.

‘கலைமகடன் பூர்வதிசை காணுங்கால் அவள்வீழியுள்
வலது விழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்’

—மனோன்மணீயம்

... ... ... ...—தண்டமிழே!

... ... ... ...—பூங்கமல