பக்கம்:உணர்வின் எல்லை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

உணர்வின் எல்லை

1

பாண்டியன் அறிவுடைநம்பி பெரும்புகழ் படைத்த பெருவேந்தன்; செங்கோல் செலுத்தியவன்; செந்தமிழ் வளர்த்தவன். அவன் பாடிய பாடல்கள் நான்கு. அவற்றுள் மூன்று அகப்பொருள் பற்றியன. புறப்பொருள் பற்றியதோ, ஒரே ஒரு பாடல்! ஆம்; ஒரே ஒரு பாடல்தான் தமிழுலகும், குழந்தை உலகும் செய்த தவத்தால் கிடைத்த பாடல்! அப்பாட்டிலே, செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம்; மழலைச் செல்வத்தைப் பெறாமல் வேறு எந்தச் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அது வீண்-பாழ்,’ என்று, தமிழக வேந்தன் சங்க காலத்தில் சொல்லிய செய்தியைக் கேட்கிறோம். அச்செய்தியோடு இன்றைய பாரதத்தின் முடிசூடா மன்னர்—நேரு பெருமான்—தன் பிறந்த நாளைக் குழந்தைகளின் திருநாளாக நாடெல்லாம் போற்றச் செய்யும் பெருமையையும் சேர்த்து நினைக்கும் போது நெஞ்சம் தேனாகிறது.

பாண்டியன் அறிவுடை நம்பி நாடாண்ட வேந்தன். மாநகரமாகிய மதுரை அவன் தலைநகர், ‘இந்திரன் அருங்கலச் செப்பு’, திறந்தது. என்னக' காட்சி வழங்கும் அப் பெருநகரையே தன் தலைக்நகராகப் பெற்ற அவனுக்குக் குறையேது?–இப்படித் தான் நம்முள் பெரும்பாலோர் நினைப்போம். ஆனால்,‘ 'அரச வாழ்வாயினும் அருமை மக்களைப் பெறாத வாழ்வு பாழ்’ என்பதை அனுபவத்தால் உணர்ந்து, மழலைச் செல்வம் பெற்று மகிழ்ந்தவன் போலும் அவன்! வாழ்க்கையில் தான் உணர்ந்-