பக்கம்:உணர்வின் எல்லை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் குழந்தை

161

அவற்றுள் ஒன்று பழனிப் பிள்ளைத் தமிழ். சின்னப்ப நாயக்கர் பாடியருளிய அந்நூலில், எளிமையும் இனிமையும் தவழக் காணலாம்; உணர்வும் உயர்வும் கொஞ்சப் பார்க்கலாம்.

பிள்ளைத் தமிழில் இருவகை உண்டு; ஒன்று ஆண்பாற் பிள்ளைத் தமிழ்; மற்றொன்று பெண்பாற் பிள்ளைத்தமிழ். கடவுளரையேனும், ஆசிரியரையேனும், உபகாரிகளையேனும் குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப் பருவங்கள் அமைத்துப் பாடும் பண்புடைய ஆண்பாற்— பெண்பாற் பிள்ளைத்தமிழ் இரண்டிற்கும் பொதுவாக அமைந்த பருவங்கள் ஏழு. அவை காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பரணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப்பருவம் அம்புலிப் பருவம் எனப்படும். பெண்பாற் பிள்ளைத் தமிழிற்கே உரிய மூன்று பருவங்கள் : அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் என்பன. ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கே உரிய மூன்று பருவங்கள்: சிற்றிற்பருவம், சிறுபறைப்பருவம், சிறுதேர்ப் பருவம் என்பன.

இவற்றுள் ஆண்பாற் பிள்ளைத் தமிழில் வரும் சிற்றிற் பருவம், சின்னஞ்சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர், பாட்டுடைத் தலைவன் தாம் கட்டி விளையாடும் சிறு வீட்டை அழிக்கும்போது, ‘எம் சிற்றிலை அழிக்காதே!’ என வேண்டுவதாகப் பாடப் பெறும். ஆணின் ஆணவத்தையும்—அழிக்கும் ஆற்றலையும், பெண்ணின் அருளுணர்வையும் —

11