பக்கம்:உணர்வின் எல்லை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

உணர்வின் எல்லை

னார்; ஔவையார் போல் குழந்தைக்காகவும் பாடினார்.

பராசக்தியையே குழந்தையாகக் கண்டு, சொல்லிய பாடலில் சங்கத் தமிழின் கருத்தைச் சுவைக்கலாம்; திவ்வியப் பிரபந்தத்தின் தெய்வமணத்தை நுகரலாம்; பேரிலக்கிய—சிற்றிலக்கியக் கற்பனை வளங்களைப் பார்க்கலாம்—மறுமலர்ச்சி உலகின் குரலைக் கேட்கலாம்! நம் உரை வேண்டாது, நம் உணர்வையே வேண்டும் அவரது பாடல்கள் இதோ:

சின்னஞ் சிறு கிளியே!—கண்ணம்மா!
      செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே—உலகில்
      ஏற்றம் புரியவந்தாய்!
இன்பக் கதைகளெல்லாம்—உன்னைப்போல்
      ஏடுகள் சொல்வதுண்டோ ?
அன்பு தருவதிலை—உனைநேர்
      ஆகுமோர் தெய்வமுண்டோ ?

மார்பி லணிவதற்கே—உன்னைப் போல்
      வைர மணிகளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே—உன்னைப் போல்
      செல்வம் பிறிது முண்டோ ?