பக்கம்:உணர்வின் எல்லை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழேயில் வென்ற இணையிலா வீரம்

169

'சிறப்புடைய முறையால் பொருளும் இன்பமும், அறத்தின் பின்னே தோன்றும் காட்சிபோல, சேரபாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக ஓங்கிய நினது ஒன்றாகிய வெண்கொற்றக் குடை, நிறம் பொருந்திய கலை நிறைந்த திங்களைப்போல ஓங்கி உயரத்தில் விளங்க, நல்ல புகழ்வேட்டையை விரும்பி, வெல்லும் போரினைச் செய்யும் பாடி வீட்டின்கண்ணே இருத்தலல்லது, இந்நகரின்கண் இருத்தலை உடன்படாய் நீ; கொம்பினது நுனி முகம் தேயத்தாக்கி, ஒன்னாரின் கடிமதிலைக்குத்தும் நின்னுடைய களிறுகள் அடங்கா மறம் உடையன; போரெனக் கேட்பின் வீரக்கழல் புனைந்த நின் மறவர் ‘காடிடைக் கடைந்த நாடு மிகத் தொலையது; ஆத லால் நாம் போர்மேற் செல்வோம்’ எனக் கருதார்; எனவே, ஓசையுண்டான விழாவையுடைய அவ்விடத்தும், பகைவர் நாட்டில் தங்கிப் பிறகு கீழ்க் கடல் பின்னதாக மேல் கடலினது வெளிய தலையையுடைய திரை, நின் குதிரையின் குளம்பின் மேல் மோத, வலமாக முறையே வருதலும் உண்டென்று, கலங்கிய நெஞ்சம் நடுங்கு துயர் பாய, துயிலாத கண்ணையுடையவர்கள் ஆனார்கள், வடநாட்டு வேந்தர்,’ என்று, கோவூர்கிழார் நலங்கிள்ளியையே முன்னிலைப்படுத்திப் பெருமிதம் தோன்றப் பாடலானார்.

‘சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்து வழிப்படூஉத் தோற்றம் போல்
இருகுடை பின்பட ஓங்கிய வொருகுடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க

நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்