பக்கம்:உணர்வின் எல்லை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

உணர்வின் எல்லை

உதாரணமாகத் திருமகளின் திருவருளை நிரம்பப் பெற நசையுற்ற பாரதியார் ‘லக்ஷ்மி பிரார்த்தனை’ யிலே ஒரு செய்யுளில்,

‘வாணி தன்னை யென்றும் — நினது
     வரிசை பாட வைப்பேன்!
நாணி ஏக லாமோ? — என்னை

     நன்க றிந்தி லாயோ?’

என்று நயமாக நவின்றுள்ளார்.

கலைமகளும் திருமகளும்

செல்வத்தினும் கல்வியே சாலச்சிறந்தது. ‘கேடில் விழுச்செல்வம்’ அன்றோ கல்வி? செல்வத்திற்கு உரியவள் திருமகளெனச் செப்புவர். கல்விக்கு உரியவள் கலைமகளெனக் கூறுவர். ஒருவன் திருமகளின் திருவருளைப் பெறாவிடினும் தீதில்லை. ஆனால், கலைமகள் அருளைப் பெறுவது அவசியம். கலைமகள் அருள் இருப்பின், அவ்வருளைக் கொண்டு திருமகளின் திருவருளைப் பெறுவது திண்ணம். கல்வியைக் கொண்டு செல்வத்தை ஈட்டலாம் என்பதுதான் உட்கருத்து. இவ்வுயரிய கருத்தைப் பாரதியார் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்; ‘அந்தத் திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்,’ என்பது அவர் வேண்டுகோள். என்னே சொல் நயம்!

பாரதியார், ‘மாயை’ என்னும் வலையில் சிக்குண்டு ‘வாணி’யை மறந்துவிட்டார். சில நாட்கள் சென்றன. பழைய ஞாபகம் திரும்பவும் வந்துவிட்டது. ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போலப்