பக்கம்:உணர்வின் எல்லை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவர் இலக்கியம்

173

பின் செல்கின்றவரே. நெல்வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ்க் காணவல்ல - வர் ஆவர். உழவருடைய கை தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப்பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை, (டாக்டர், மு. வ. அவர்கள் தெளிவுரை.)

திருக்குறளில் உள்ள இம் மறைமொழிகள் யாவும் சங்க காலத் தமிழர் நெஞ்சில் பதிந்திருந்த பேருண்மைகள். உழவர் பெருமையை உலகப் பொதுமறை இவ்வாறு போற்றிய பொன்னெறியையே சங்கச் சான்றோர் பலரும் மேற்கொண்டனர். இவ்வுண்மை புறநானூறு, போன்ற பழந்தமிழ் நூல்களால் இனிது விளங்கும். சான்றாக, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய பாடலைச் சுட்டிக் காட்டலாம் ;


                       ............ கூர்வேல் வளவ!
.....................................
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
       ............................
பகடு புறத்தருநர் பார மோம்பிக்
குடிபுறத் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே!

—(புறம், 3.5)