பக்கம்:உணர்வின் எல்லை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவர் இலக்கியம்

177

சேற்று நண்டு சேற்றில்வளை ஏற்ற டைக்குதே—மழை
      தேடி யொரு கோடி வானம் பாடியாடுதே
போற்று திருமாலழகர்க் கேற்றமாம் பண்ணைச்—சேதிப்

      புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே.(35)

சமதர்மகாலம்

இவ்வாறு சமய காலத்தில் சிறந்து வளர்த்த பள்ளுப் பிரபந்தங்கள் மக்கள் மன்றில் எழுப்பிய மக்கள் இலக்கிய—உழவர் இலக்கிய உணர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டார் சமய காலத்தை அடியொற்றித் தோன்றிய சமதர்ம யுகத்தின் கவிஞராகிய பாரதியார். ‘பாரத சமுதாயம் முழுவதும் விடுதலை பெற வேண்டும். விடுதலை பெற்ற பாரத சமுதாயம் -‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்’—முழுமைக்கும் பொது உடைமை வேண்டும் என்று மழங்கிய மகாகவி பாரதியார், மழைக்கு கண்டு ‘சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிய’ காட்சியை வருணிக்கும் பள்ளுப்பாடல் உணர்ச்சியை உள்ளத்துள் கொண்டு பாடிய அழியாத் தமிழ்க் கவிதையே அவர்தம் ‘சுதந்திரப் பள்ளு’. விடுதலைக்கான அறிகுறியை எவ்வாறோ மனத்தகத்தே மின்னிய சிந்தனை மின்னலால் அறிந்து தீர்க்க தரிசியாராய், வராளிப் பண்ணில், ஆதி தாளத்தில், உணர்ச்சி பொங்க,

ஆடுவோமே—பள்ளுப்—பாடுவோமே;

      ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

12