பக்கம்:உணர்வின் எல்லை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோகனப் பன்ஞ

181


நூல்கள் பற்றி இப்போது தெரிய வருகிறது. அவற்றுள் ஒன்றே மோகனப்பள்ளு. இந்நூல் தவிர வேறு மூன்று பள்ளு நூல்களின் பெயரும் திரு. க. சி. கந்தையா பிள்ளையால் அரிதின் முயன்று வெளியிடப் பெற்றுள்ள 'தமிழ் இலக்கிய அகராதி'யால் தெரியவருகிறது. அவையாவன:1, என்னயினா புலவர் இயற்றிய முக்கூடற்பள்ளு 2. முருகர் பள்ளு 3. வேதாந்தப்பள்ளு

இனி 'மோகனப்பள்ளு' பற்றிய சில முக்கில செய்திகளை மட்டும் சிந்திப்போம். 'மோகனப் பள்'ளின் பழைய அச்சுப் பிரதி ஒன்றைப் பல ஆண்டுகட்கு முன் யான் காண நேர்ந்தது. அப் பள்ளின் பெயரே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது! 'மோகனப் பள்ளு' நுாலின் பழைய அச்சுப் பிரதியின் முகப்பில் முதற் பக்கத்தில் காணப்பெறும் குறிப்பு வருமாறு;

'தத்துவாங்கத் துணை - பொய்கைப் பாக்கம் சின்னண்ண முதலியார், இவர் கனிஷ்டர் நல்லண்ண முதலியார் இவர்கள் பேரில் கும்பகோணம் மடந் தத்துவலிங்கையரவர்கள் பாடிய மோகனப்பள்ளும் மேற்படி நல்லண்ண முதலியார். பொய்யா மொழியிஸ்வரர் பேரில் பாடிய கற்கும் நன் மொழியும் இவை சென்னீர்க்கப்பம் கிராமத்தாராகிய புதுவை பெரியசாமி முதலியார் கேட்டுக்கொண்ட படி பொய்கைப்பாக்கம் சுப்பராய முதலியார் குமாரர் சபாபதி முதலியாரால் பார்வையிடப்பட்டு, மெய்