பக்கம்:உணர்வின் எல்லை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. வையையின் வளம்

விழிக்கு வியப்பூட்டி, வாழ்வுக்கு உயிர் ஊட்டும் வளமை படைத்து விளங்கும் ஆற்றை, அழகும் அருளும் நிறைந்த பெண்ணாகப் புனைந்துரைப்பது ஓரு சிறந்த இலக்கிய மரபு. ஆம் மரபுவழி நின்று இளங்கோ அடிகள் ஓர் ஆற்றை வருணிக்கிறார்.

ஆற்றில் இருகரைகளிலும் எண்ணற்ற எழில் மலர்கள் பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கின்றன. குரவம், வகுளம், கோங்கு, வேங்கை, வெண்கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருது, சேடல், செருந்தி, செண்பகம், பாதிரி முதலியவை அம்மலர்கள். இவை கரையின் புறவாய் எங்கும் பூத்துக் கிடப்பது; ஆற்றுப்பெண் உடுத்திய பூந்துகில் போலக் காட்சி அளிக்கிறது. ஆற்றின் அகவாயில் இன்னும் பல எழில்மலர்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றன. அவை குருக்கத்தி, செம்முல்லை, வளவிய கொடியினை யுடைய மோகி மல்லிகை, வெள்ளை நறுந்தாள், வெட்பாலை, மூங்கில், கொழுவிய கொடியாய்ப் பொருந்தி வளர் சிவத்தை, குட்டிப் பிடவு, இருவாட்சி முதலியன. இவை முகை உடைந்து தகைபெற விளங்குவது, நதிநங்கை உடுத்திய மேகலைபோல் காட்சி அளிக்கின்றது. இத்தகு மலர்களை இருகரைகளிலும் கொண்டு அகன்று உயர்ந்து விளங்கும் கரைகளே அவ்வழகு மகளுக்கு அல்குலாய் அமை